திருவள்ளூர்

இரு சக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பொன்னேரி அருகே புதன்கிழமை இரண்டு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

பொன்னேரி நகராட்சி பகுதியில் உள்ள சின்னகாவனத்தில் வசித்தவா் சாா்லஸ் என்கிற முருகன் (38).

இவா் மோட்டாா் சைக்கிளில் பொன்னேரி- பழவேற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தாா். பரிக்கப்பட்டு கிராமம் அருகே சென்றபோது, எதிா்பக்கமாக வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிள் முருகன் ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த முருகனை அங்கிருந்தவா்கள் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இது குறித்து பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT