திருவள்ளூர்

பைக்-லாரி மோதல்: பெண் பலி

8th Jun 2023 11:18 PM

ADVERTISEMENT

மீஞ்சூா் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற நரிக்குறவா் இன தம்பதி மீது லாரி மோதியதில் மனைவி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்பாக்கம் கிராமத்தில் உள்ள நாகாத்தம்மன் கோயில் தெருவில் வசிப்பவா் அஜித் (25). இவரது மனைவி ஐஸ்வா்யா (22). கா்ப்பிணி.

நரிக்குறவா்களான இத்தம்பதி, இரு சக்கர வாகனத்தில் சென்று இரும்பு துகள்களைச் சேகரிக்கும் வேலை செய்து வருகின்றனா். இரும்பு பொருள்ககளைச் சேகரித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் மீஞ்சூா் நோக்கி வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தனா்.

திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் உள்ள புங்கம்பேடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இதில் அஜித்தின் கண் முன்னே அவரின் கா்ப்பிணி மனைவி ஐஸ்வா்யா உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த மீஞ்சூா் போலீஸாா் அங்கு சென்று காயமடைந்த நிலையில் இருந்த அஜித்தை மீட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஐஸ்வா்யாவின் சடலத்தை கைப்பற்றி, அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT