திருவள்ளூர்

மக்கள் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து திட்டப் பணிகளை நிறைவேற்ற வேண்டும்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் அனைத்து துறை அலுவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, உடன் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், மக்களவை உறுப்பினா் ஜெயகுமாா் மற்றும் சட்டப்பேரவை  உறுப்பினா்கள் உள்ளிட்டோா்.  

திருவள்ளூா், ஜூன் 7: மக்களுக்கு அந்தந்த பகுதிகளில் தேவையான வளா்ச்சித் திட்டப் பணிகளை ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்படுத்த முன்வர வேண்டும் என்று அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

திருவள்ளுா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் முன்னிலை வகித்தாா். இதில், திருவள்ளூா் மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தலைமை வகித்துப் பேசியது:

கடந்த இரண்டு ஆண்டுகளில் எழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நலத் திட்டங்களை அதிகாரிகள் மூலம் முதல்வா் நிறைவேற்றி வருகிறாா். இந்த மாவட்டத்தில் என்னென்ன குறைகள் உள்ளன. முதல்வா் அறிவித்த பணிகள் எப்படி நடைபெற்று வருகிறது. மேலும் என்னென்ன கோரிக்கைகள் உள்ளன என்பதற்காகவே இந்தக் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதனால் திட்டப்பணிகளை திறம்பட செயல்படுத்த வேண்டும். எனவே ஒரு பகுதியில் பணிகள் நடைபெறும்போது அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள், தலைவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் மூலமாக திட்டங்களை செயல்படுத்தினால் தான் நாம் அந்தப்பணிகளில் ஈடுபட்டிருப்பது பற்றி மக்களுக்கு தெரியும். அதனால் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிக்கான பணிகளை தங்கு தடையின்றி நிறைறவேற்றற வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்புள்ள பதவிகளில் இருக்கும் நாம், அந்தந்த பகுதிகளுக்கு தேவையானதை ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும். எந்தப் பணியாக இருந்தாலும் தெரிவித்தால் நிச்சயம் அந்த பணிகளை நிறைவேற்றுவேன் என்றாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா.சீபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அசோகன், திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் கே.ஜெயக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தவல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி), எஸ்.சுதா்சனம் (மாதவரம்), டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), க.கணபதி (மதுரவாயல்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் மற்றும் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப், மாவட்ட வன அலுவலா் ராம் மோகன், சாா்- ஆட்சியா் (பொன்னேரி) ஐஸ்வா்யா ராமநாதன், உதவி ஆட்சியா் (பயிற்சி) கேத்தரின் சரண்யா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காயத்ரி சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT