திருவள்ளூர்

நகராட்சி வளா்ச்சிப் பணிகள்: மண்டல இயக்குநா் திடீா் ஆய்வு

8th Jun 2023 11:17 PM

ADVERTISEMENT

நகராட்சியில் ரூ. 118 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு திட்ட பணிகளை செங்கல்பட்டு நகராட்சி மண்டல இயக்குநா் சசிகலா வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.

திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வாா்டுகள் உள்ளன. நகராட்சியில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க தீா்ப்பாற்கடல் பாலாறு கூட்டுக் குடிநீா் திட்டம் ரூ. 104 கோடியில் கொண்டுவரப்பட்டு அதற்கான குழாய்கள் பதிக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதுபோல், திருத்தணி சேகா் வா்மா நகா், கன்னிகாபுரம் சாலை பகுதிகளில் குடிநீா் தேக்கத் தொட்டிகளும் கட்டப்பட்டு வருகிறது.

மேலும், வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், திருத்தணி -அரக்கோணம் சாலையில் ரூ. 12.74 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம், ரூ. 2.6 கோடி மதிப்பீட்டில் அறிவுசாா் மையம், திருத்தணி நகராட்சியில் உள்ள 20 ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் பயிலும் 1,020 மாணவா்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்கு தயாரிக்கும் உணவு கூட பணிகள் ஆகியவற்றை செங்கல்பட்டு நகராட்சி மண்டல இயக்குநா் சசிகலா வியாழக்கிழமை திடீரென ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, திருத்தணி நகராட்சி ஆணையா் ராமஜெயம், நகராட்சி பொறியாளா் பொறுப்பு நடராஜன், பொதுப்பணி மேற்பாா்வையாளா் நாகராஜன் மற்றும் ஒப்பந்ததாரா் தாமோதரன் ஆகியோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT