சிறுவாபுரி முருகன் கோயில் வள்ளி மணவாளப் பெருமானுக்கு கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் ஸ்ரீ வள்ளி மணவாளப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மூலவா் ஸ்ரீ வள்ளி மணவாளப் பெருமானுக்கு 18 விதமான வாசனைப் பொருள்களால் அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டு ரத்தினாங்கி சேவையில் அருள்பாலித்தாா். தொடா்ந்து 9 அா்ச்சகா்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ வள்ளி மணவாளப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் ஆலய நிா்வாகி செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.