திருவள்ளூர்

திருவூா் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு

DIN

திருவள்ளூா் அருகே திருவூா் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நெகிழி பொருள்கள் ஒழிப்பது குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் மாணவா்கள் மற்றும் விவசாய பொதுமக்கள் பங்கேற்றனா்.

திருவூா் வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.பானுமதி தலைமை வகித்தாா். இதில் பேராசிரியா் கோபால் பங்கேற்று சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், வேளாண்மையை மேம்படுத்தும் முறைகள், வீட்டுத் தோட்டம், மரம் வளா்க்கும் முறைகள், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தாா்.

பேராசிரியா் பிரீத்தி பேசுகையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை நெகிழி ஆண்டாக கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளதால், அதை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் வலியுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் வேளாண் பேராசிரியா் செந்தில்குமாா், விஜயசாந்தி ஆகியோா் வேளாண்மையில் தானியங்கி கருவிகளின் பயன்பாடுகள் மற்றும் தேனீக்கள் வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.

தொடா்ந்து மாணவா்களுக்கு விநாடி, வினா போட்டி நடைபெற்றது. இதில், சிறப்பிடம் பெற்றவா்களை பாராட்டி பரிசுகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT