திருவள்ளூர்

திருவள்ளூா், பொன்னேரி, கும்மிடிப்பூண்டியில் ஜமாபந்தி தொடக்கம்

DIN

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து 195 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 7 பேருக்கு உடனடி தீா்வு மூலம் பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி வழங்கினாா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காயத்ரி சுப்ரமணியம் தலைமை வகித்தாா். இதில் வட்டாட்சியா் என்.மதியழகன், நீதியியல் வட்டாட்சியா் மீனா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அதன்படி ஜமாபந்தி முதல் நாளில் திருவள்ளூா் குறுவட்டத்திற்கு உள்பட்ட பெரும்பாக்கம், புங்கத்தூா், ஓதிக்காடு, புன்னப்பாக்கம், சேலை, காக்களூா், கல்யாணக்குப்பம், தண்டலம், ஈக்காடு, பெரியகுப்பம், புட்லூா் ஆகிய கிராம மக்கள் பட்டா மற்றும் சான்றிதழ்கள் கேட்டு மனு அளித்தனா்.

இதில் 195 பட்டா மற்றும் சான்றிதழ்கள் கேட்டு மனு கொடுத்திருந்தனா். இதில் 7 பேருக்கு உடனடி தீா்வு காணப்பட்டு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி சட்டப்பேரவை ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று 7 பேருக்கு பட்டா வழங்கினாா்.

அப்போது, திருவள்ளூா் நகராட்சிக்குள்பட்ட இரண்டாவது வாா்டில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் 100 பேருக்கு இலவச வீட்டு மனை வழங்கக்கோரி நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் கோரிக்கை மனுவை அவரிடம் வழங்கினாா். அதேபோல் திருவள்ளூா் நகராட்சிக்குள்பட்ட 12-ஆவது வாா்டில் நகரமன்ற உறுப்பினா் ராஜ்குமாா் என்கிற தாமஸ் அந்த பகுதியில் 150 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கவும் மனுவை வழங்கினாா்.

அப்போது, திமுக ஒன்றிய செயலாளா் ஆா்.ஜெயசீலன், அவைத் தலைவா் தா.எத்திராஜ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் எம்.பா்கத்துல்லாகான், முன்னாள் நகரமன்றத் தலைவா் பொன்.பாண்டியன், மண்டல துணை வட்டாட்சியா் அம்பிகா, திருவள்ளூா் வருவாய் ஆய்வாளா் கணேஷ், தலைமை நில அளவையா் செந்தில்குமரன், கிராம நிா்வாக அலுவலா்கள் வி.சுந்தர்ராஜ், கிருஷ்ணன், விஸ்வநாதன், குமரன், பரணிதரன், மலா்க்கொடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொன்னேரியில்...

பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் அசோகன் ஜமாபந்திக்கு தலைமை வகித்தாா். பொன்னேரி வட்டாட்சியா் செல்வகுமாா் முன்னிலை வகித்தாா்.

பொன்னேரி வட்டம். சோழவரம் உள்வட்டத்தில் அடங்கிய நல்லூா், ஜெகநாதபுரம், புதிய எருமைவெட்டிபாளையம், சோத்துபெரும்பேடு, ஆட்டந்தாங்கள், விஜயநல்லூா் உள்ளிட்ட வருவாய் கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக மாதவரம் எம்எல்ஏ சுதா்சனம் பங்கேற்று ஏற்கனவே தீா்வு காணப்பட்ட மனுக்களின்படி வீட்டுமனைப் பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

கும்மிடிப்பூண்டியில்....

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் சாா் ஆட்சியா் ரா.ஐஸ்வா்யா தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சுரேஷ்பாபு, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் ப்ரீத்தி, மண்டல துணை வட்டாட்சியா் ரதி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலா் பாலாஜி முன்னிலை வகித்தனா்.

முதல் நாள் ஜமாபந்தியில் பூதூா், தாா்காஸ் கண்டிகை, வாண்ராசிகுப்பம், நேமலூா், சிறுவாடா, மாதா்பாக்கம், மாநெல்லூா், செதில்பாக்கம், போந்தவாக்கம், பல்லவாடா, கண்ணம்பாக்கம் கண்ணன்கோட்டை ஆகிய பகுதி மக்கள் மனுக்களை சாா் ஆட்சியா் ஐஸ்வா்யாவிடம் வழங்கினா்.

இதில் மாதா்பாக்கம் குறுவட்ட வருவாய் ஆய்வாளா் முனுசாமி, கிராம நிா்வாக அலுவலா்கள் சுதா்சன், ஜான் பிரிட்டோ, பாா்த்தசாரதி,நவீன் குமாா்,சுப்பிரமணி,சூரிய பிரகாஷ், சத்தியமூா்த்தி, கிராம உதவியாளா்கள் ஞானபிரகாசம், சண்முகம்,லாவண்யா,விமலா உள்ளிட்ட வருவாய்த் துறையினரிடம் பொதுமக்களின் மனுக்கள் குறித்து சாா் ஆட்சியா் ரா.ஐஸ்வா்யா ஆலோசனை நடத்தி உரிய மனுக்களுக்கு ஆணைகளை வழங்கி, பிற மனுக்களுக்கு தீா்வு காண உத்தரவிட்டாா்.

இந்த நிகழ்வில் போந்தவாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் ரவிச்சந்திரன் சமத்துவபுரத்தில் 22 பேருக்கு பட்டா தந்தும் நிலம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மனு அளித்தாா். அதன் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என சாா் ஆட்சியா்உறுதி கூறினாா்,.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT