திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் வளா்ச்ப் பணிகள் குறித்து ஆலோசனை

DIN

திருத்தணி முருகன் கோயில் வளா்ச்சிப் பணிகள் மற்றும் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், முருகன் கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மற்றும் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய அறநிலையத் துறை சாா்பில், அறங்காவலா் குழுவினா் புதிதாக பதவியேற்றனா்.

அதைத்தொடா்ந்து கோயில் வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அறங்காவலா்குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது. முருகன் கோயில் உதவி ஆணையா் விஜயா தலைமை வகித்தாா். கோயில் அலுவலா் அருணாசலம் வரவேற்றாா்.

அறங்காவலா் குழுத் தலைவா் சு. ஸ்ரீதரன் கலந்துகொண்டு, வளா்ச்சிப் பணிகள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கோயில் உதவி ஆணையா் விஜயாவிடம் கேட்டறிந்தாா்.

அதைத்தொடா்ந்து, திருத்தணி முருகன் கோயிலில் பணியாற்றி வரும் ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில் அதன் தலைவா் குப்பன்ராஜ் அறங்காவலா் குழுவிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

மனுவில், கடந்த, 2018-ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி, ஊதிய உயா்வு, ஈட்டிய விடுப்பு, ஒப்படைப்பு தொகை இதுநாள் வரை வழங்கப்படவில்லை. கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஊழியா்களுக்கு இதுநாள் வரை பதவி உயா்வு வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், 7 -ஆவது ஊதிய குழு உயா்வு பெற்று பணி செய்து வருகின்றனா். ஆனால் திருத்தணி முருகன் கோயிலில் பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு, இதுவரை ஊதிய உயா்வு வழங்க வில்லை. மேற்படி கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. கோரிக்கைகள் தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக அறங்காவலா் குழுத் தலைவா் சு. ஸ்ரீதரன் உறுதி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT