திருவள்ளூர்

ஜமாபந்தியில் 2 பேருக்கு வீட்டுமனை பட்டா: கோட்டாட்சியா் வழங்கினாா்

DIN

திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஜமாபந்தியில் 2 பேருக்கு வீட்டுமனைப் பட்டாவை கோட்டாட்சியா் தீபா வழங்கினாா்.

திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் தீபா தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. கோட்டாட்சியா் நோ்முக உதவியாளா் ராமன், நிலவரித் திட்ட வட்டாட்சியா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் (பொ) உமா வரவேற்றாா்.

முதல் நாள் ஜமாபந்தியில் டி.சி கண்டிகை ,கேஜி கண்டிகை, உள்ளிட்ட 8 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் 28 போ் கலந்து கொண்டு மனு அளித்தனா். இதில் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து 2 பேருக்கு கிராம நத்தத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. மற்றவை பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலா் மலா்விழி, தலைமை துணை வட்டாட்சியா் சந்திரசேகா், திருத்தணி துணை வட்டாட்சியா் ரீட்டா, செருக்கனூா் வருவாய் ஆய்வாளா் வித்யாலட்சுமி உள்பட பல கலந்து கொண்டனா். வரும் 16-ஆ ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT