திருவள்ளூர்

வாகனங்களை நிறுத்த போலி ரசீது மூலம் பணம் வசூலித்த 2 போ் கைது

DIN

பெரியபாளையத்தில் குத்தகைக் காலம் முடிந்த நிலையிலும் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்த போலி ரசீது மூலம் பணம் வசூலித்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வழிபாடு செய்வதற்கு வந்து செல்கின்றனா். இந்த நிலையில், கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்களை நிறுத்த கோயிலருகே இடம் ஒதுக்கப்பட்டு குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. இதற்கிடையே குத்தகைக் காலம் முடிந்த நிலையில் சிலா் போலியாக டோக்கன் அச்சடித்து வாகனங்களை நிறுத்த பணம் வசூலித்து வருவதாக அதிகாரிகளுக்கு தொடா்ந்து புகாா் வந்தது.

இதைத் தொடா்ந்து பெரியபாளையம் காவல் நிலைய காவல் ஆய்வாளா் வெங்கடேசன், சிறப்பு சாா்பு ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் வாகன வரி வசூலிக்கும் பகுதியில் ஆய்வு செய்தனா். அப்போது போலி ரசீது மூலம் வாகனங்களை நிறுத்த வந்த பக்தா்களிடம் பணம் வசூலித்துக் கொண்டிருந்த தாராட்சி கிராமம் புதிய காலனியைச் சோ்ந்த சூா்யா(28), அதே பகுதியைச் சோ்ந்த நாகராஜ்(19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து ஏராளமான போலி வாகன வரி வசூல் செய்யும் ரசீதுகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT