மீஞ்சூா் அருகே திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். உடன் பயணம் செய்தவா் காயம் அடைந்தாா்.
பாடியநல்லூா் மொண்டியம்மன் நகா் பகுதியில் உள்ள நேரு தெருவில் வசித்து வந்தவா் லோகநாதன் (22). ஐயப்பன் (30).
ஐயப்பன் முகவரி தெரியாத நிலையில் இருவரும் ஒரே மோட்டாா் சைக்கிளில் பொன்னேரி-திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் உள்ள புங்கம்பேடு பகுதியில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது பின்னால் வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லோகநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். உடன் பயணித்த ஐயப்பன் பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்த மீஞ்சூா் போலீஸாா் சென்று ஐயப்பனை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.
லோகநாதன் சடலத்தை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மீஞ்சூா் போலீஸாா் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.