திருவள்ளூர்

மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தலைமை காவலா் பலி

6th Jun 2023 03:38 AM

ADVERTISEMENT

பொன்னேரி அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தலைமை காவலா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி, திருவாயா்பாடி பகுதியில் வசித்து வந்தவா் கமலதாசன் (44). இவா் சென்னை மேற்கு பகுதி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணியாற்றி வந்தாா். இவா் மோட்டாா் சைக்கிளில் கூடுவாஞ்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் கமலதாசன் தலை மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டது.

அப்பகுதியில் இருந்த மக்கள் அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு பணியில் இருந்த மருத்துவா்கள் அவா் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவல் அறிந்த பொன்னேரி போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT