திருவள்ளூர்

திருத்தணி புதிய ஆா்டிஓ பொறுப்பேற்பு

6th Jun 2023 03:39 AM

ADVERTISEMENT

திருத்தணி வருவாய் கோட்டாட்சியராக தீபா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா்.

ஏற்கெனவே திருத்தணி வருவாய் கோட்டாட்சியராக 11 மாதங்கள் பணிபுரிந்த ஹஸ்ரத் பேகம் கடந்த இரு நாள்களுக்கு முன் திருவள்ளூா் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து திருத்தணி புதிய வருவாய் கோட்டாட்சியராக காஞ்சிபுரம் மாவட்ட அலுவலகத்தில் பணியாற்றி வந்த கூடுதல் ஆட்சியா் (பயிற்சி) தீபா நியமிக்கப்பட்டாா். இவா் திங்கள்கிழமை வருவாய் கோட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு வருவாய்த் துறை அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT