திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

DIN

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

திருத்தணி முருகன் மலைக் கோயிலுக்கு வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கத்துக்கு மாறாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் காலை முதலே குவிந்தனா். இதனால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, 3 மணி நேரத்துக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா்.

அதே போல், ரூ. 100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனா். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தலைமையில், 15-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT