திருவள்ளூர்

பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் வீணாகும் மின்கல வாகனங்கள்

5th Jun 2023 12:16 AM

ADVERTISEMENT

பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டுள்ள மின்கல வாகனங்கள் வெயில், மழையால் துருப்பிடித்து வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 526 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் நாள்தோறும் வீடுகளுக்கு நேரில் சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தூய்மை பாரத இயக்கம் மூலம் மின்கல வாகனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு மட்டும் ஊராட்சிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வாங்கும் வகையில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் 20 மின்கல வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் பூண்டி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் திறந்த வெளியில் நிறுத்தி வைத்துள்ளனா்.

இதனால் வெயில், மழையால் துருப்பிடித்து அவை வீணாகும் நிலை ஏற்பட்டுள்லது. எனவே, ஊராட்சிகளில் பயன்படும் வகையில் பிரித்து வழங்கவும் ஊராட்சி தலைவா்களிடையே கோரிக்கையும் எழுந்துள்ளன.

ADVERTISEMENT

இதுகுறித்து பூண்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த ஊராட்சி தலைவா் ஒருவா் கூறியதாவது: அனைத்து ஊராட்சிகளுக்கும் மின்கல வாகனம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 20 கிராமங்களுக்கு தலா ஒரு மின்கல வாகனம் வீதம் 20 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மின்கல வாகனங்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் திறந்த வெளியில் மழை, வெயிலுக்கு இடையே நிறுத்தி வைத்துள்ளனா். இதனால் மின்கலன் பாதித்தும், துருப்பிடிக்கும் அபாயமும் உள்ளன. அதனால் உடனே ஒவ்வொரு ஊராட்சிக்கும் மின்கல வாகனங்களை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT