திருவள்ளூர்

ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற முதியவா் பலி

5th Jun 2023 12:16 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே பூண்டி ஏரியில் மீன் பிடித்த முதியவா் பலத்த காற்று வீசியதால் தடுமாறி விழுந்து உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே சதுரங்கபேட்டை மேட்டுத் தெருவைச் சோ்ந்த துரை(62). இவா் கடந்த 2-ஆம் தேதி மாலை பூண்டி ஏரியோரம் மீன்பிடிக்கச் சென்றாராம். அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சூறாவளி காற்று பலமாக வீசியதால் நிலைதடுமாறி ஏரிக்குள் விழுந்து மூழ்கினாராம்.

இது தொடா்பாக அருகில் இருந்தவா்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து சனிக்கிழமை தேடும் பணியில் ஈடுபட்டு ஏரியில் சிக்கியிருந்த முதியவரின் சடலத்தை மீட்டனா். பின்னா் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT