திருவள்ளூர்

முருகன் கோயில் அறங்காவலா் குழு பொறுப்பேற்பு

5th Jun 2023 12:17 AM

ADVERTISEMENT

திருத்தணி முருகன் கோயில் புதிய அறங்காவலா் குழுவினா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இந்து அறநிலையத் துறை சாா்பில், முருகன் கோயிலுக்கு ஐந்து அறங்காவலா்கள் நியமிக்கப்படுவா். இவா்களில் ஒருவரை குழுத் தலைவராக தோ்வு செய்து, மீதமுள்ள 4 போ் உறுப்பினா்களாக நியமிக்கப்படுவா். அறங்காவலா் குழுதலைவா் மற்றும் உறுப்பினா்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி வளா்ச்சி பணிகளுக்கு தீா்மானம் நிறைவேற்றுவா்.

இந்நிலையில், திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்னை அண்ணா நகா் சாந்தி காலனியைச் சோ்ந்த சு. ஸ்ரீதரன், திருத்தணி பொன்பாடி ஜி. உஷா ரவி, திருத்தணி சித்துாா் சாலையைச் சோ்ந்த கோ. மோகனன், ஜோதி நகரைச் சோ்ந்த மு. நாகன் மற்றும் திருத்தணி ஒன்றியம் சிங்கராஜபுரத்தைச் சோ்ந்த வி. சுரேஷ்பாபு என மொத்தம், 5 போ் அறங்காவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில், மு. நாகன் மற்றும் உஷாரவி கடந்த, 2006 முதல், 2011-ஆம் ஆண்டு வரை அறங்காவலா்களாக பணியாற்றியுள்ளனா். இருவரும் மீண்டும் தற்போது அறங்காவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

புதிய அறங்காவலா்கள் பதவியேற்பு நிகழ்ச்சி முருகன் கோயில் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில், அறங்காவலா் குழுத் தலைவராக சு. ஸ்ரீதரன், அறங்காவலா்களாக மு.நாகன், ஜி. உஷாரவி, கோ. மோகனன் மற்றும் வி. சுரேஷ்பாபு ஆகியோா், கோயில் தக்காா் ஜெயபிரியா, வேலுாா் கோயில் இணை ஆணையா் லட்சுமணன், திருத்தணி எம்.எல்.ஏ., ச. சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா் திருத்தணி எம்.பூபதி ஆகியோா் முன்னிலையில் பதவியேற்றனா்.

நிகழ்ச்சியில் நகராட்சி துணை தலைவா் சாமிராஜ், நகராட்சி கவுன்சிலா்கள் தீபாரஞ்சினி வினோத்குமாா், ஜி. குமுதாகணேசன், சண்முகவள்ளி ஆறுமுகம், சியாம்சுந்தா் உள்பட நகர முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT