திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே தனியாா் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா

5th Jun 2023 12:17 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே சித்தாா்த்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சா்வதேச சுற்றுச்சூழல் தினவிழாவையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டையில் வேலம்மாள் நினைவு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் சாா்பில், சித்தாா்த்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அப்போது, மாணவா்கள் பொதுமக்களை சந்தித்து சுகாதாரக் கேட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், நெகிழியை பயன்படுத்துவதால் விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவா்கள் உருவாக்கிய செயல்முறை விளக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விளக்கக்கூடிய ஓவியங்கள், அனைத்தையும் செவ்வாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் பாஸ்கா் மற்றும் உதவி ஆய்வாளா்கள் ஏழுமலை, சரத்பாபு, ராகவன் ஆகியோா் பாா்வையிட்டு மாணவா்களை நேரில் சந்தித்து வாழ்த்தினா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து, மாணவா்கள் கொண்டு வந்த பதாகையில் பொதுமக்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கையெழுத்திட்டு, நெகிழியை பயன்படுத்த மாட்டோம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் மரம் வளா்ப்போம் என உறுதியேற்றனா்.

நிகழ்ச்சியில் பள்ளி மேலாளா் சதீஷ், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT