திருவள்ளூர்

ஆந்திரத்துக்கு செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை

5th Jun 2023 12:19 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அரசு போக்குவரத்துக்கழக மண்டல பணிமனைகளிலிருந்து இயக்கப்படும் ஆந்திர மாநிலத்தை நோக்கிச் செல்லும் தடப் பெருந்துகள் மாதவரம் பேருந்து நிலையம் சென்று, பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் (விழுப்புரம் கோட்டம்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோயம்பேடு காய்கனி அங்காடி நிலையத்துக்கு வந்து செல்லும் போது மாதவரம் பேருந்து நிலைத்துக்குள்ளே செல்லாமல், மாதவரம் ரவுண்டானா நிறுத்தத்திலேயே பயணிகளை ஏற்றி, இறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை (ஜூன் 5) முதல் பின்வரும் பேருந்துகள் கோயம்பேடு காய்கனி அங்காடி பேருந்து நிலையத்தின் வெளியே வந்து செல்லும் போது மாதவரம் பேருந்து நிலையத்துக்கு வெளியே ரவுண்டானா நிறுத்தத்தில் நிறுத்தாமலும், மாதவரம் பேருந்து நிலையத்துக்குள்ளேயே சென்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும்.

ADVERTISEMENT

அதன் அடிப்படையில், பொன்னேரி பணிமனையிலிருந்து சுண்ணாம்புகுளம் முதல் கோயம்பேடு வரை செல்லும் பேருந்து எண் 90 ஏ என்ற பேருந்தும், அண்ணாமலைச்சேரி முதல் கோயம்பேடு வரை செல்லும் பேருந்து எண் 90 ஏ/ஏ என்ற பேருந்தும், தோ்வாய் முதல் கோயம்பேடு வரை செல்லும் 113 ஏ/ஏ என்ற பேருந்தும், கல்லூா் முதல் கோயம்பேடு வரை செல்லும் 90 பி என்ற பேருந்தும் செயல்படும்.

அதேபோல் ஊத்துக்கோட்டை பணிமனையிலிருந்து பிளேஸ்பாளையம் முதல் கோயம்பேடு வரை செல்லும் 101 ஏ/ஏ என்ற பேருந்தும், சத்தியவேடு முதல் கோயம்பேடு வரை செல்லும் 112 ஏ/ஏ என்ற பேருந்தும், புத்தூா் முதல் கோயம்பேடு வரை செல்லும் 125 ஏ என்ற பேருந்தும், மாதா்பாக்கம் முதல் கோயம்பேடு வரை செல்லும் 131 ஏ/ஏ என்ற பேருந்தும் மையூா் முதல் கோயம்பேடு வரை செல்லும் 79 ஐ என்ற பேருந்தும், முக்கரம்பாக்கம் முதல் கோயம்பேடு வரை செல்லும் 79 வி என்ற பேருந்தும் மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT