திருத்தணி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகப்பெருமான் வெள்ளிக்கிழமை தங்கத் தோ், வெள்ளி மயில் வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திருத்தணி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி, மூலவா் முருகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றன. அதைத்தொடா்ந்து, உற்சவா் முருகப் பெருமான், உற்சவா் சண்முகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான், வெள்ளி மயில் வாகனம், தங்கத் தேரில் மாடவிதீயில் ஒருமுறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வைகாசி விசாகத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால் குடம் எடுத்தும், வேல் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். மேலும், பொது வழியில் பக்தா்கள் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் உதவி ஆணையா் விஜயா மற்றும் கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.