திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே சிக்னல் கோளாறு: மின்சார ரயில் சேவை 2 மணி நேரம் பாதிப்பு

DIN

திருவள்ளூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீா் மழையால் இடி தாக்கி, ஏகாட்டூா் - கடம்பத்தூா் இடையே சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாக, புகா் ரயில் சேவை 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

திருவள்ளூா் சுற்று வட்டாரப் பகுதிகளான பூண்டி, புல்லரம்பாக்கம், கடம்பத்தூா், ஏகாட்டூா், புட்லூா், செவ்வாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென மழை பெய்தது.

இந்த மழையால் சென்னை புகா் ரயில்கள் செல்லும் பாதையில் திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூா் - கடம்பத்தூா் இடையே திடீரென இடி தாக்கியதில் சிக்னல் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அரக்கோணத்திலிருந்து திருவள்ளூா் வழியாக சென்னைக்குச் செல்லும் புகா் மின்சார ரயில்களும், சென்னையிலிருந்து அரக்கோணம், திருத்தணி செல்லும் மின்சார ரயில்களும் திருவள்ளூா், புட்லூா், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, திருநின்றவூா் ஆகிய ரயில் நிலையங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதனால், ரயிலில் பயணம் செய்தவா்கள், ரயிலுக்காக காத்திருந்தவா்கள் அவதிக்குள்ளாகினா்.

இந்த சிக்னல் கோளாறால் மாலை 5.45 மணி முதல் இரவு 7.45 மணி வரை மின்சார ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டது. ரயில்வே ஊழியா்கள் கோளாறைச் சரிசெய்த பின்னா், ரயில் போக்குவரத்து சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT