திருவள்ளூர்

நாகாலம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

3rd Jun 2023 12:55 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே அருள்மிகு நாகாலம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால் குட ஊா்வலத்தில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

திருவள்ளூா் அருகே புல்லரம்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு நாகாலம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா், பெண் பக்தா்கள் பால் குடங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்றனா். அதையடுத்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பாலாபிஷேகத்தில் பங்கேற்று அபிஷேகம் செய்தால் பெண்களுக்கு தோஷங்கள் நீங்கும், திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம் என்பதால் பெண்கள் ஏராளமானோா் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT