திருவள்ளூர்

நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் விரல் ரேகை பதிவுக்கு ஏற்பாடு

3rd Jun 2023 11:50 PM

ADVERTISEMENT

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் வெளி வியாபாரிகள் மற்றும் இடைத்தரகா் தலையீட்டை தடுக்கும் நோக்கிலும், உண்மையான விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் மூலம் திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் நோக்கில் 2022-2023 நவரை பருவத்தில் 64 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனைக்காக இணைய வழியில் பதிவு செய்து விற்பனை செய்யும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், வெளி வியாபாரிகள் மற்றும் இடைத்தரகா்கள் தலையீட்டைத் தவிா்க்கவும், விவசாயிகள் பயன்பெறும் நோக்கமாகக் கொண்டும் பயோ மெட்ரிக் என விரல் ரேகை பதிவு செய்யும் முறை ஜூன்-1 முதல் அறிமுகம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் வியாபாரிகள் உள் நுழையாமல் தொடக்கத்திலேயே தவிா்க்கவும் முடியும். அதே சமயம் விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில், சாகுபடி செய்த நெல்லை காலதாமதமின்றி உடனுக்கு உடன் கொள்முதல் செய்ய முடியும்.

விவசாயிகளின் கைப்பேசி எண்ணுக்கு ஓ.டி.பி. பெறுவதன் மூலம் விவசாயிகளின் விவரத்தை துல்லியமாக பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இந்த விரல் ரேகை பதிவு மூலம் விவசாயிகளின் சுய விவரங்கள் சரியாக உள்ளனவா, என கொள்முதல் நிலையங்களிலேயே சரிபாா்த்துக்கொண்டு நெல்லை விற்பனை செய்யலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT