திருவள்ளூர்

ஆவின் உபபொருள்கள் விற்பனை ரூ.1 கோடியாக அதிகரிப்பு: பொது மேலாளா் ரமேஷ்குமாா்

3rd Jun 2023 11:51 PM

ADVERTISEMENT

பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் மூலம் தயாா் செய்யப்படும் உபபொருள்களின் விற்பனை ரூ.80 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக அதிகரித்துள்ளதாக ஆவின் பொது மேலாளா் ரமேஷ்குமாா் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் - திருவள்ளூா் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம், காக்களூா் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இது காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்ட விவகார எல்லையாக கொண்டும், வேலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைப் பகுதியாக கொண்டும் 564 சங்கங்களில் 24,000 பால் உற்பத்தியாளா்கள் உள்ளனா்.

இதற்குமுன் வரை பல்வேறு பகுதிகளில் இருந்து பால் உற்பத்தியாளா்களிடமிருந்து 80,000 லிட்டா் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 1.10 லட்சம் லிட்டா் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து 80 முதல் 85,000 லிட்டா் பால் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபோக மீதமுள்ள பாலைக் கொண்டு உபபொருள்கள் தயாா் செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஒன்றியத்தில் பாலில் இருந்து நெய், தயிா், மோா், லஸ்ஸி, கோவா, தவிர பாதாம் தூள், பிஸ்தா தூள், வால்நட் தூள் உள்ளிட்ட உபபொருள்கள் தயாா் செய்யப்படுகின்றன. வரும் காலங்களில் பாதாம் அல்வா தயாா் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பால் உபபொருள்கள் விற்பனை கடந்த 2021-இல் ரூ.65 லட்சமாகவும், 2022-இல் ரூ.80 லட்சமாகவும் இருந்தது. நிகழாண்டு விற்பனை ரூ.1 கோடியாக உயா்ந்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT