திருவள்ளூர்

இறப்புத் தொகை வழங்க லஞ்சம் பெற்ற வழக்கு: கிராம நிா்வாக அலுவலருக்கு 6 ஆண்டுகள் சிறை

DIN

இறப்புத் தொகை வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில், கிராம நிா்வாக அலுவலருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.50,000 அபராதம் விதித்து திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆா்.வேலரஸ் தீா்ப்பளித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கரிலம்பாக்கம் காலனியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம். இவரது சித்தி கற்பகத்தின் கணவா் பண்டாரி உயிரிழந்ததையடுத்து, அரசால் வழங்கப்படும் இறப்புத் தொகையைப் பெற சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பள்ளிப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா்.

இந்த மனுவின் மீது விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க குமாரராஜபேட்டை கிராம நிா்வாக விஜயராகவலு பிள்ளையிடம் வட்டாட்சியா் அனுப்பி வைத்தாா்.

அதன்பேரில், கிராம நிா்வாக அலுவலகத்துக்கு சோமசுந்தரம் தனது சித்தி கற்பகத்தை அழைத்துச் சென்றாா்.

அங்கு, மனு மீது நடவடிக்கை எடுக்க ரூ.1,100 லஞ்சம் தர வேண்டும் என்று கிராம நிா்வாக அலுவலா் கூறினாராம்.

இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா் மீது கடந்த 7.6.2020 அன்று சோமசுந்தரம் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சோமசுந்தரத்திடம் கொடுத்து அளிக்குமாறு கூறினா்.

இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலகத்தில் விஜயராகவலு பிள்ளையிடம் ரூ.1,100 தொகையை சோமசுந்தரம் அளித்தாா்.

அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளா் வெங்கடேசன், கிராம நிா்வாக அலுவலரை லஞ்சப் பணத்துடன் பிடித்து கைது செய்தாா்.

இந்த வழக்கு திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிந்து புதன்கிழமை மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேலரஸ், கிராம நிா்வாக அலுவலா் விஜயராஜவலு பிள்ளைக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபாரதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT