திருவள்ளூர்

நெய்தவாயல் பிடாரி கவுத்தியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

1st Jun 2023 11:13 PM

ADVERTISEMENT

 

மீஞ்சூா் அருகே நெய்தவாயல் கிராமத்தில் உள்ள பிடாரி கவுத்தியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இந்த கோயில் சிதிலமடைந்து இருந்தது. இந்நிலையில், கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த 30-ஆம் தேதி வினாயகா் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

4 கால பூஜைகள் நிறைவடைந்த நிலையில், வியாழக்கிழமை காலை பிடாரி கவுத்தியம்மன் கோபுர கோபுர கலசங்கள் மீது புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தா்கள் ஓம்சக்தி என கோஷங்கள் எழுப்பி கவுத்தியம்மனை தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

இதனைத் தொடா்ந்து கோயில் நிா்வாகம் சாா்பில் விழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT