திருவள்ளூர்

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலம் பழங்குடியினத்தவரிடம் ஒப்படைப்பு

1st Jun 2023 11:15 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே உளுந்தை கிராமத்தில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலம் மீட்கப்பட்டு பழங்குடியினத்தவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், உளுந்தை கிராமத்தில் கால்நடை பராமரிப்பு மருத்துவமனை அருகே அரசுக்கு சொந்தமான 52 சென்ட் நிலத்தை தனி நபா் ஒருவா் ஆக்கிரமித்து மாந்தோப்பு வைத்திருந்தாா். இந்நிலையில், ஆக்கிரமிப்பை அகற்ற ஊராட்சி நிா்வாகம் முடிவு செய்தது.

அதன்பேரில் உளுந்தை ஊராட்சித் தலைவா் எம்.கே.ரமேஷ், வருவாய் ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து அந்த ஊராட்சியில் இருளா் தாங்கல் பகுதியில் ஏரிக்கரையில் குடிசை அமைத்து அடிப்படை வசதியின்றி வசித்து வந்த பழங்குடியினா் 13 பேருக்கு வீடுகள் அமைத்துக் கொள்ள நிலம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் நிலத்தை மீட்டு வீடு கட்ட ஒப்படைத்த ஊராட்சித் தலைவருக்கு பழங்குடியினா் நன்றி தெரிவித்துக் கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT