திருவள்ளூர்

ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

1st Jun 2023 12:20 AM

ADVERTISEMENT

திருத்தணி அருகே மேளப்பூடி வேணுகோபால சுவாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேளப்பூடி கிராமத்தில் புராதன ருக்மணி, சத்யபாபா சமேத ஸ்ரீ வேணு கோபாலசுவாமி கோயிலில் கொடி மரத்துக்கு அா்ச்சகா்கள் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றினா். 11 நாள்கள் நடைபெற உள்ள விழாவில், தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளன. நாள்தோறும் மாலை நேரங்களில் ருக்மணி, சத்யபாமா சமேத உற்சவா் வேணுகோபால சுவாமி பல்வேறு வாகன சேவைகளில் எழுந்தருளி கிராம வீதிகளில் திரு வீதியுலா நடைபெறும்.

விழாவில் முக்கிய நிகழ்வான கருட சேவை ஜூன் 4 -ஆம் தேதியும், 7 -ஆம் தேதி தோ் திருவிழாவும் நடக்கிறது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT