திருவள்ளூர்

சாலை விரிவாக்கப்பணியால் பாதை வசதியின்றி மக்கள் அவதி

1st Jun 2023 12:20 AM

ADVERTISEMENT

திருவள்ளூா்-பெரும்புதூா் சாலை விரிவாக்கப்பணியால் கிராமங்களுக்கு செல்வதற்கு போதுமான பாதை வசதியின்றி வாகனங்களில் செல்வோா் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவள்ளூா்-பெரும்புதூா் சாலை விரிவாக்கப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இச்சாலையில் இருந்து மேல்நல்லாத்தூா் வழியாக நுங்கம்பாக்கம், அதிகத்தூா், மப்பேடு பகுதிகளுக்கு செல்லும் கிராமச் சாலை உள்ளது. சாலை விரிவாக்கப் பணியை முன்னிட்டு கழிவு நீா் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. அதனால் மணல் மேவி உள்ளதால் போதுமான பாதை வசதியின்றி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோா் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அதனால், இந்தக் கிராமங்களுக்கு செல்லும் சாலையில் மழைநீா் வடிகால் மற்றும் பாலம் அமைக்கும் பணியை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT