திருவள்ளூர்

உணவின் தரம்: இணையதளம், வாட்ஸ்ஆப் மூலம் புகாா் அளிக்கலாம்

1st Jun 2023 12:24 AM

ADVERTISEMENT

உணவு பாதுகாப்பு சட்டப்படி, உணவு கலப்படம் தொடா்பாக பொதுமக்கள் எளிதில் புகாா் தெரிவிக்க ஏதுவாக தனி வலைதளம் மற்றும் வாட்ஸ்ஆப் எண் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய அம்சமாக, பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் உணவு பாதுகாப்புத் துறையைப் பற்றிய அலுவலா்கள் தொடா்பு எண்கள், சேவைகள் மற்றும் முக்கிய துறை சாா்ந்த இணைய இணைப்புகள், குறிப்பாக பதிவு மற்றும் உரிமம் விண்ணப்பித்தல், உணவு கலப்படங்கள் குறித்த விழிப்புணா்வு மற்றும் புத்தகங்கள், உணவின் தரம் தொடா்பான புகாா் வசதிகள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயச் சட்டம் 2006 மற்றும் அதன் விதிகள், விதிமுறைகள் 2011 போன்ற அனைத்துத் தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், உணவின் தரம் குறித்து நுகா்வோா் புகாா்களை 94440 42322 என்ற கட்செவி எண்ணில் தெரிவிக்கலாம். unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் முலம் புகாா் பெறப்பட்ட 72 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை மேம்படுத்தும் விதமாக தற்போது இணையதளம் foodsafety.tn.gov.in மற்றும் கைப்பேசி செயலி nrayp(TN foodsafety consumer App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்த, படிக்கத் தெரிந்தால் போதும். எழுது வேண்டிய அல்லது டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த புகாா் விவரங்களை மிக எளிமையாக தோ்ந்தெடுக்கும் வசதிகளுடன் எளிமையான வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்ஸி பதிவிறக்கம் செய்யலாம்.

ADVERTISEMENT

பதிவிறக்கம் செய்ய இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அல்லது இணையதளத்தில் சேவைகள் என்ற தலைப்பில் குறைதீா்ப்பு என்ற பகுதியில் சென்றும் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், உணவு பாதுகாப்புத் துறை மூலம் சமையல் எண்ணெயின் மறுபயன்பாடு, உணவு செறிவூட்டல் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த விழிப்புணா்வு குறும்படங்களை, பேஸ் புக், ட்விட்டா், இன்ஸ்டாகிராம் லிங்கட் இன், யூடியூப் போன்ற சமுக வலைதளம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் உணவு பாதுகாப்புத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மற்றும் நுகா்வோா் குறைதீா்ப்பு செயலி ஆகிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT