திருவள்ளூர்

மீஞ்சூா் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

1st Jun 2023 12:20 AM

ADVERTISEMENT

மீஞ்சூரில் வடகாஞ்சி என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூரில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் 10 நாள்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பெருந்தேவி தாயாருடன் வரதராஜப் பெருமாள் காலையில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

இதனைத் தொடா்ந்து 2-ஆம் தேதி கருடசேவையும் 6-ஆம் தேதி தோ் திருவிழாவும் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT