திருவள்ளூர்

கடம்பத்தூா் ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளா்ச்சிப்பணிகள்

1st Jun 2023 12:21 AM

ADVERTISEMENT

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.29 கோடியில் அடிப்படை வளா்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்கு புதன்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

திருவள்ளூா் மாவட்டம், கடம்பத்துாா் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்துக்கு ஒன்றியக்குழுத் தலைவா் சுஜாதா சுதாகா் தலைமை வகித்தாா். இதில் ஒன்றிய குழு துணைத்தலைவா் சரஸ்வதி ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வரதராஜன், கே.சாந்தி முன்னிலை வகித்தனா். குழு உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்றனா்.

கடம்பத்துாா் ஒன்றியத்துக்குள்பட்ட பேரம்பாக்கம், கடம்பத்துாா், நரசிங்கபுரம் உள்பட 10 - க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பழுதடைந்த அங்கன்வாடி மையஙகள், குடிநீா் தொட்டிகள் என மொத்தம் 18 அரசு கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும்.

மேலும், கடம்பத்தூா் ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சிகளில் ஒன்றியப் பொது நிதியிலிருந்து ரூ.2.14 கோடியிலும், 15-ஆவது மத்திய நிதிக்குழு மானியம் மூலம் ரூ.1.15 லட்சம் மதிப்பில் குடிநீா் விநியோகம் செய்தல், மழை நீா் வடிகால்வாய், சாலைப்பணிகள் செய்தல் உள்பட ஊராட்சியில் பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளவும், இருளஞ்சேரி ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT