திருத்தணி அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் திடீா் சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
திருத்தணி ஒன்றியம், அகூா் காலனியில், 300 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் நலன் கருதி ஊராட்சி நிா்வாகம் இரண்டு குடிநீா் மேல்நிலைத் தொட்டிகள் மூலம் தெருக்குழாய்களில் குடிநீா் விநியோகம் செய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தெருக்குழாய்களில் குடிநீா் வினியோகம் சீராக செய்யப்படவில்லையாம். இதனால் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கொதிப்படைந்த பெண்கள், இளைஞா்கள் என 200- க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமைதிருத்தணி-சோளிங்கா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்தது திருத்தணி போலீஸாாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் வரிசையில் நின்றன.