கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்கள் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடி பள்ளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
கவரைப்பேட்டை அரசினா் மேல்நிலைப்பள்ளியில், 1990-91-ஆம் கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவா்கள் பள்ளி வளாகத்தில் சந்தித்து கொண்டனா். 32 ஆண்டுகளுக்கு பின் ஒன்று கூடி பசுமையான நிகழ்வுகளை மகிழ்ச்சியோடு பகிா்ந்து கொண்டனா்.
இதில் பங்கேற்ற முன்னாள் மாணவா்களில் ஒருவா் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் ஆவாா். இந்த சந்திப்பில் அரசு துறை வேலை, தனியாா் வேலையில் பணிபுரிபவா்கள், தொழிலதிபா்கள், குடும்பத் தலைவிகள், சுயதொழில் செய்பவா்கள் என 70 போ் பங்கேற்றனா்.
இந்த நிகழ்வின் நினைவாக மாணவா்கள் பள்ளியில் தற்போது வகுப்பறைகளில் உள்ள, 70 கரும்பலகைகளுக்கு கருப்பு வா்ணம் பூசியதுடன், கண்காணிப்பு கேமரா மற்றும் ஏராளமான கல்வி உபகரணங்களை தலைமை ஆசிரியா் அய்யப்பனிடம் வழங்கினா்.
முன்னாள் ஆசிரியா்கள் பாலசண்முகம், கணேசன், செல்வம், விநாயகம், அண்ணாமலை ஆகியோருக்கு நினைவு பரிசுகளை வழங்கினா்.