திருவள்ளூர்

புழல் சிறையில் உயா்நீதிமன்ற நீதிபதி திடீா் ஆய்வு

12th Jul 2023 02:37 AM

ADVERTISEMENT

புழல் மத்திய சிறையில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றத்தில் உள்ள புழல் மத்திய சிறையில் திருவள்ளூா் மாவட்ட பொறுப்பு நீதிபதியும், உயா்நீதிமன்ற நீதியரசருமான எஸ்.எம்.சுப்பிரமணியம், புழல் மத்திய சிறையிலும், அம்பத்தூா் நீதிமன்றத்திலும், புழல் பெண்கள் சிறையிலும் திடீா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது சிறைவாசிகளின் நிலை குறித்தும் கேட்டறிந்தாா். மேலும் திருவள்ளூா் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.செல்வசுந்தரி மற்றும் தலைமை நீதித்துறை நடுவா் ஆா். வேலரஸ் மற்றும் சிறை கண்காணிப்பாளா்கள் கிருஷ்ணராஜ் மற்றும் நிகிலா நாகேந்திரன் உள்ளிட்ட பலா் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT