செங்குன்றம் அருகே அங்கன்வாடி முன்மாதிரி சமையல் கூடத்தில் அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் முன்மாதிரி சமையல் கூடம் கட்டுப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநா் பொன்னையன், திருவள்ளூா் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஷெரிப் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். நிகழ்வின்போது பம்மதுகுளம் ஊராட்சி மன்ற தலைவா் வி.எம்.ராஜன், மாவட்ட செயற்பொறியாளா் ராஜவேல், உதவி செயற்பொறியாளா் சிவசங்கரி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் ரூபேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன் உள்ளிட்டோா் இருந்தனா்.