திருவள்ளூர்

கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு

DIN

கும்மிடிப்பூண்டி பகுதியில் கழிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி கழிவு நீா் அகற்றும் வாகன உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

கும்மிடிப்பூண்டி வட்டத்தில் 3 லட்சம் போ் வசித்து வருகின்றனா். இங்கு 400-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள வீடுகளிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும் ரசாயனமற்ற சாதாரண கழிவுகள், கழிவு நீா் வாகனங்கள் மூலம் அகற்றப்படுகிறது. இந்த கழிவுநீரை அப்புறப்படுத்துவதற்கு முறையான இடம் இல்லாததால், ஆங்காங்கே உள்ள மழைநீா் கால்வாய்களில் திறந்து விடப்படுகிறது.

இதனையறிந்த அதிகாரிகள், பூந்தமல்லியில் உள்ள கழிவு நீா் சுத்திகரிக்கும் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என உத்தரவிட்டனா். இதற்கு அதிகமான எரிபொருள் செலவாகிறது என்பதால் கும்மிடிப்பூண்டியில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி வட்டார கழிவு நீா் அகற்றும் வாகன உரிமையாளா்கள் நல சங்கத்தினா் பல்வேறு போராட்டங்களை நடத்தினா். மேலும், மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட்டதையடுத்து, உரிய இடத்தை ஒதுக்கீடு செய்ய கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவருக்கு உத்தரவிட்டனா்.

ஆனால், இதுவரை இடம் ஒதுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில்,கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி சங்கத்தின் சட்ட ஆலோசகா் ராமலிங்கம், செயலா் கோபி, பொருளாளா் நாகராஜ் உள்ளிட்ட சங்கத்தினா் சட்ட ஆலோசகா் வழக்கரைஞா் எம்.சம்பத்துடன் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் கண்ணனிடம் மனு அளித்தனா். இது குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT