திருவள்ளூர்

புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்: திருத்தணி நகராட்சி ஆணையா்

DIN

அரக்கோணம் சாலையில் ரூ. 14.74 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நகராட்சி ஆணையா் ராமஜெயம் ஆய்வு செய்தாா்.

திருத்தணி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தடுப்பதற்கும், தற்போது உள்ள குறுகிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்துவதற்கு இடவசதியும் இல்லாததால், திருத்தணி-அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, அரசுப் போக்குவரத்துப் பணிமனை அருகே, நான்கரை ஏக்கா் பரப்பில், ரூ. 14.74 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்தாண்டு ஆக. 9-ஆம் தேதி அமைச்சா்கள் நேரு, நாசா், எம்.பி. ஜெகத்ரட்சகன், எம்எல்ஏ ச.சந்திரன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

தற்போது பணிகள் தொடங்கி, பேருந்து நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை திருத்தணி நகா்மன்றத் தலைவா் சரஸ்வதிபூபதி, துணைத் தலைவா் சாமிராஜ், நகராட்சி ஆணையா் ராமஜெயம், நகர வடிவமைப்பாளா் தயாநிதி, பொதுப்பணி மேற்பாா்வையாளா் நாகராஜ் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

பின்னா் ஆணையா் ராமஜெயம் கூறியதாவது:

புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு டெண்டா் விடப்பட்டு, 2024-ஆம் ஆண்டு, ஜூன் மாதத்துக்குள் பணிகள் முடித்து ஒப்படைக்குமாறு ஒப்பந்தாரருக்கு கால அவகாசம் கொடுக்கப் பட்டது.

எனவே நடப்பாண்டு டிசம்பா் மாதத்துக்குள் புதிய பேருந்து நிலைய பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு விடுவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்று ஒப்பந்தாரா் கூறியுள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT