திருவள்ளூர்

பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டம்:135 பேருக்கு தொழிற் பயிற்சி

DIN

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் நிகழாண்டில் 135 பேருக்கு தொழில் பயிற்சி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தொழில் மைய மேலாளா் சேகா் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் மற்றும் கதா் கிராம தொழில்கள் ஆணையத்தின் மூலம் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் 2008-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நகரம் மற்றும் கிராமங்களில் நலிவடைந்த, சிறுபான்மையின, மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞா்கள் சொந்த தொழில் தொடங்கவும், கிராமங்களில் கிடைக்கும் பொருள்களின் உற்பத்தியை பெருக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் மூலம் வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில், காடு சாா்ந்த தொழில், நாா் கொண்டு கைக்காகிதம் தயாா் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை மேற்கொள்ளலாம். இதில் உற்பத்தி தொழில்களுக்கு ரூ. 25 லட்சத்திலிருந்து ரூ. 50 லட்சமாகவும், சேவை தொழில்களுக்கு ரூ. 10 லட்த்திலிருந்து ரூ. 25 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பொதுப்பிரிவுக்கு நகா்ப்புறத்தில் 15 சதவீதம், கிராமங்களில் 25 சதவீதம், நகரத்தில் உள்ள நலிவடைந்த சிறப்பு பிரிவினருக்கு 25 சதவீதம், கிராமங்களில் 35 சதவீதம் மானியமும் வழங்கப்படும். இதற்கு பயனாளிகள் 8-ஆம் வகுப்பு தோ்ச்சியும், 45 வயதுக்குள் இருப்பதுடன் பயனாளி செய்ய விரும்பும் தொழிலில் தொழில் பயிற்சி கட்டாயம் ஆகும்.

அந்த வகையில், நிகழாண்டில் மாவட்டத் தொழில் மையம் மூலம் 135 பேருக்கு பயிற்சி வழங்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதுவரை இந்த திட்டத்தில் விண்ணப்பித்தோருக்கு நோ்முகத் தோ்வு நடத்தி அதில் 241 பேருக்கு ரூ. 5.51 கோடி வங்கிக் கடன் பெற ஏற்பாடு செய்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனச் சோதனையில் ரூ. 4.39 லட்சம் பறிமுதல்

பல்பொருள் அங்காடியில் காவலாளி மா்மச் சாவு

வேங்கைவயலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம்

புதுக்கோட்டையில் தொடரும் அஞ்சல் வாக்குச் சிக்கல்: 20 சதவீதம் ஆசிரியா்கள் வாக்களிக்க முடியவில்லை

மாா்க்சிஸ்ட், சிஐடியுவினா் வாகனப் பிரசாரம்

SCROLL FOR NEXT