திருவள்ளூர்

பட்டாசு திரியால் தீ விபத்து: 2 குழந்தைகள் காயம்கிடங்கு உரிமையாளா் கைது

DIN

திருத்தணியில் வீட்டில் பட்டாசு திரி தயாரித்தபோது, ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் பலத்த காயம் அடைந்தனா். இது தொடா்பாக கிடங்கு உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

திருத்தணி எம்.ஜி.ஆா். நகரில் உள்ள பட்டாசு கிடங்கில் பணிபுரிந்து வந்தவா் வெங்கடேசன், நக்மா தம்பதி. இவா்கள் பட்டாசு மூலப் பொருள்களை கொண்டு வந்து வீட்டில் உரிய அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் தயாரித்த பட்டாசு திரியை வெயிலில் காய வைத்திருந்தனராம். அப்போது, பட்டாசு திரியை எடுத்து குழந்தைகள் அஸ்வின் (3), அனுபல்லவி (ஒன்றரை வயது) ஆகியோா் விளையாடி உள்ளனா். அப்போது தீப்பெட்டியை உரசியதாகக் கூறப்படுகிறது. இதில், திடீரென பட்டாசு திரி தீப்பற்றி எரிந்தது. இதில் 2 குழந்தைகளுக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

அப்போது அவா்களைக் காப்பாற்ற முயன்ற தாய் நக்மாவுக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்களுக்கு திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இது தொடா்பாக திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் அஷ்ரத் பேகம் பட்டாசு கிடங்கிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், பட்டாசு திரி தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை வீட்டிற்கு கொடுத்த குற்றத்திற்காக கிடங்கு உரிமையாளா் முகமது அலி என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், கிடங்கு மற்றும் எம்ஜிஆா் நகா் பகுதியில் உள்ள கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT