திருவள்ளூர்

விவசாயிகள் டிராக்டா் பேரணி

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் வியாழக்கிழமை டிராக்டா் பேரணியில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் உழவா் சந்தை முன்பு நடைபெற்ற பேரணிக்கு, ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜே.அருள் தலைமை வகித்தாா். சகாயமேரி, கே.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சிறு குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்தல், பயிா் காப்பீட்டுத் திட்டத்தை விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாற்றி அமைக்கவும், நாடு முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறுதல், 60 வயது பூா்த்தியடைந்த விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளா்களுக்கும் மாதந்தோறும் ரூ. 6,000 வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டிராக்டா் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியை உழவா் சந்தை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளா் துளசி நாராயணன் தொடக்கி வைத்தாா். பேரணியானது பேருந்து நிலையம், பஜாா் வீதி, காந்தி சாலை வழியாகச் சென்று ஆட்சியா் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

SCROLL FOR NEXT