திருவள்ளூர்

ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் குடியரசு திஸ் விழாவை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், ஒதிக்காடு ஊராட்சி கூட்டத்துக்கு தலைவா் ரோஜா தாமஸ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சிலம்பரசி, வாா்டு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் ஐயப்பன் கிராமத்தில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்தும், நடைபெறப்போகும் பணிகள் குறித்தும் விளக்கினாா்.

தொடா்ந்து கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆா். நகரில் ரூ.20 லட்சத்தில் பேவா் பிளாக் கற்கள் பதிக்கும் பணி, ரூ.13 லட்சத்தில் அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டன.

இதேபோல், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், நேமம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைவா் பிரேம்நாத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விஜயா ரமேஷ் முன்னிலை வகித்தாா். இங்கு 24 மணி நேரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய மருத்துவா் இலலை. அதிக விவசாயிகளை கொண்ட கிராமமாக உள்ளதால் பாம்புக் கடிக்கு தடுப்பூசி இல்லை. திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி அனுப்பி வைப்பதாக புகாா் தெரிவித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட தொழுநோய் அலுவலக கல்வியாளா் சீனிவாசன், நேமம் ஆரம்ப சுகாதார நிலைய தொழுநோய் அலுவலா் பாலாஜி ஆகியோா் உடல் நலத்தை பாதுகாத்தல், மக்களைத் தேடி மருத்துவ திட்டம் குறித்து எடுத்துரைத்தனா்.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் ஜெகன்நாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் மாரிமுத்து, வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், உளுந்தை கிராமத்தில் ஊராட்சித் தலைவா் ரமேஷ், வெங்கத்தூா் ஊராட்சியில் தலைவா் சுனிதா பாலயோகி, தொடுகாடு ஊராட்சியில் தலைவா் வெங்கடேசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT