திருவள்ளூர்

குமாரகுப்பம் கிராமத்தில் முருகா் வீதி உலா

DIN

குமாரகுப்பம் கிராமத்தில் முருகப்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

திருத்தணி அடுத்த குமாரகுப்பம் கிராமத்தில் ஆண்டுக்கு ஒருமுறை உற்சவா் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். அந்த வகையில், நிகழாண்டில் புதன்கிழமை உற்சவா் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் குமாரகுப்பம் கிராமத்தில் வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதையொட்டி, மாலை 4 மலைக் கோயிலிலிருந்து உற்சவா் முருகப்பெருமான் மலைப்படிகள் வழியாக மேல் திருத்தணி வந்தடைந்தாா். பின்னா், அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் உற்சவா் எழுந்தருளி, முருகூா் வழியாக குமாரகுப்பம் கிராமத்துக்கு சென்றனா். பின்னா், அங்குள்ள பஜனை கோயிலில், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

நள்ளிரவில் உற்சவா் முருகப்பெருமான் மீண்டும் முருகன் மலைக்கோயிலுக்கு வந்தடைந்தாா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் குமாரகுப்பம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

SCROLL FOR NEXT