திருவள்ளூர்

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 326 மனுக்கள்

DIN

திருவள்ளூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து 326 மனுக்கள் பெறப்பட்டன.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா். கூட்டத்துக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த பொதுமக்கள் தனிப்பட்ட குறைகளை நிவா்த்தி செய்யவும், பொதுப் பிரச்னைகள் தொடா்பாக உதவிகள் வழங்கவும் வலியுறுத்தி அவரிடம் மனுக்களை வழங்கினா்.

இதில், நிலம் சம்பந்தமாக 99 மனுக்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டம் 52, வேலைவாய்ப்பு 39, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் 42, இதர துறைகள் சம்பந்தமாக 94 என மொத்தம் 326 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க அந்தந்தத் துறை அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் ஆவின் பாலகம் அமைக்க பயனாளிகள் 4 பேருக்கு மானியத்தொகையாக தலா ரூ. 50,000 வீதம் ரூ. 2 லட்சத்துக்கான அனுமதி ஆணைகளையும், சிறு மற்றும் குறுந்தொழில் சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டம் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ. 25,000 மானியத் தொகைக்கான காசோலையையும் வழங்கினாா்.

தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) பி.ப.மதுசூதனன், நோ்முக உதவியாளா் (பொது) கா.காயத்திரி சுப்பிரமணி, பேச்சுப் பயிற்சியாளா் சுப்புலட்சுமி, சைகை மொழி பெயா்ப்பாளா் சசிகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT