செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இவர் இல்லாதது ஆச்சர்யமளிக்கிறது: ரிக்கி பாண்டிங்

19th May 2023 04:21 PM

ADVERTISEMENT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இல்லாதது ஆச்சர்யமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக அணியில் இடம்பெறாமலிருக்கும் ரிஷப் பந்த்தினுடைய இடத்தில் இஷான் கிஷன் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் எனவும், அவர் அணியில் இருப்பது அணிக்கு பலம் சேர்க்கும் விதமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் ரிக்கி பாண்டிங் பேசியதாவது: கே.எல்.ராகுல் காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இந்திய அணியில் இஷான் கிஷன் இடம் பெற்றுள்ளது இந்திய அணிக்கு வலு சேர்க்கும். அவரது அதிரடியான ஆட்டம் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும். சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பெறாதது ஆச்சர்யமாக உள்ளது. இருப்பினும், அணியில் இஷான் கிஷனின் வருகை முக்கியமானதாக இருக்கும். அவர் விளையாடும் விதம் ரிஷப் பந்த் விளையாடுவது போன்றே இருக்கும். அவர் நடுவரிசை ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடும் திறன் படைத்தவர். சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினால் இந்தியாவுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கும் அதே வெற்றி வாய்ப்பு உள்ளது என்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 7 ஆம் தேதி முதல் ஓவலில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT