இந்தியா

ராகுல் காந்தியின் அமெரிக்க பயணத்தில் மாற்றம் 

19th May 2023 04:11 PM

ADVERTISEMENT

ராகுல் காந்தியின் அமெரிக்க சுற்றுப் பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 10 நாள் பயணமாக மே 31-ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மே 31-ஆம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே அதாவது மே 28-ஆம் தேதி அவர் அமெரிக்கா செல்ல உள்ளார்.

இந்தப் பயணத்தின்போது நியூயாா்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலீஸுக்கு செல்லும் ராகுல், அங்குள்ள இந்திய வம்சாவளியினா் மத்தியில் உரையாற்ற உள்ளதாக வெளிநாட்டு காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும்  பல்கலைக்கழக மாணவா்கள் மத்தியிலும் அவா் உரையாற்றுகிறாா். 

கடந்த மாா்ச் மாதம் பிரிட்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை ராகுல் அவமதித்துவிட்டதாக கூறி மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தியது. இந்த விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

ADVERTISEMENT

Tags : rahul gandhi
ADVERTISEMENT
ADVERTISEMENT