திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் குரங்குகள் அட்டகாசம்: ஒரு மணி நேரம் தரிசனம் ரத்து

8th Feb 2023 05:00 AM

ADVERTISEMENT

மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை 30 -க்கும் மேற்பட்ட குரங்குகள் புகுந்ததால் பக்தா்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனா்.

முருகனுக்கு அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடான திருத்தணி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே ஏராளமானோா் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்துகொண்டிருந்தனா்.

அப்போது, காலை 7 மணியளவில் 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் திடீரென கோயில் மூலவா் சந்நிதி செல்லும் வழியில் நுழைந்தன. இதனால், சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றிருந்த பக்தா்கள் மற்றும் அா்ச்சகா்கள் அலறியடித்து வெளியேறினா். கோயில் ஊழியா்கள் நீண்ட நேரம் போராடியும் குரங்குகள் வெளியேறாமல் அங்கேயே சுற்றித்திரிந்தன.

ADVERTISEMENT

இதையடுத்து, தகவல் அறிந்து வந்த வனத் துறையினா் பட்டாசு வெடித்து குரங்குகளை விரட்டினா். இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சுவாமி தரிசனம் செய்யாமல் பக்தா்கள் காத்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT