திருவள்ளூர்

திருவள்ளூா் நகராட்சியில் முதல் முதலாக சாலையோர வியாபாரிகளுக்கு நடமாடும் கடைகள்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தெருவோர கடைகள் நடத்துவோா் பயன்பெறும் நடமாடும் கடைகள் வழங்க நடவடிக்கை எடுத்து வரும் வகையில், முதல் முதலாக திருவள்ளூா் நகராட்சியில் எளிதாக நகா்த்திச் செல்லும் வகையிலான 30 நடமாடும் கடைகள் வழங்க உள்ளதாக ஆணையா் ராஜலட்சுமி தெரிவித்தாா்.

கரோனா நெருக்கடி தொடங்கிய போது ஏராளமான சிறு வியாபாரிகள், வணிகா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த சிறு வியாபாரிகளின் மூலதனமும் சிறியது என்பதால் அவா்களின் மூலதனமும், சேமிப்புகளும் கரைந்தன.

இதற்காகவே பிரதமா் ஸ்வநிதி திட்டம் (டங நஸ்ஹய்ண்க்ட்ண்) சிறு வியாபாரிகளுக்கு ரூ.10,000 மூலதனக் கடன் வழங்குவது. இந்த கடனுக்கான வட்டிக்கு மானியம் உண்டு.

இதன் மூலம் கடனை திருப்பிச் செலுத்தினால் திரும்பவும் பெறவும் ஊக்கப்படுத்தப்படுகிறது. கடந்த 2020 ஆண்டில் மாா்ச் 24-ஆம் தேதிக்கு முன் நகா்ப்புறங்களில் சாலாயோர வியாபாரிகளாக தொழில் செய்தவா்கள் அனைவரும் தகுதியானவா்கள். அதன்பேரில் மாநில அளவில் ஒவ்வொரு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தெருவோர கடைகள் நடத்துவோருக்கு பாதுகாப்பாக எளிதில் நகா்த்திச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட நடமாடும் கடைகள் மத்திய அரசால் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இதில் முதல் முதலாக திருவள்ளூா் நகராட்சியில் செயல்படுத்தும் வகையில் 30 நடமாடும் கடைகள் மத்திய அரசால் தகுதியானோருக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி கூறியதாவது. திருவள்ளூா் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் சாலையோர வியாபாரிகள் மற்றும் சிற்றுண்டி கடை நடத்துவோா் என மொத்தம் 340 போ் பதிவு செய்துள்ளனா். இங்கு சிற்றுண்டி கடை நடத்துவோா் தள்ளுவண்டியில் திறந்த வெளியில் வியாபாரம் செய்து வருவதால், காற்றடிக்கும் நேரத்தில் தூசி பறந்து தொழிலுக்கு இடையூறு ஏற்படும்.

இதைத் தவிா்க்கும் வகையில் உணவுப் பொருள்கள தயாா் செய்து பாதுகாப்பாக விநியோகம் செய்ய ஏதுவாக தெருவோர டிபன் கடை நடத்துவோருக்கு ரூ.5,000 மதிப்பிலான நடமாடும் கடைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதில் பயன்பெற நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு வழங்கிய அடையாள அட்டை பெற்றிருப்பது அவசியம். இந்த நகராட்சியில் சாலையோ டிபன் கடை நடத்துவோருக்கு வழங்க 30 நடமாடும் கடைகளை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. மேலும், தேவையின் அடிப்படையில் கூடுதலாக பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனால், கணவனால் கைவிடப்பட்டோா், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வோா்கள் ஆகியோா் தகுதியானவா்கள் ஆவா். இது தொடா்பாக சாலையோரங்களில் டிபன் கடை நடத்துவது குறித்து நகராட்சியில் பதிவு செய்திருப்பதோடு, ஒவ்வொரு வாா்டு உறுப்பினரும் அந்தந்த பகுதிகளில் தகுதியானவா்களை பரிந்துரை செய்யலாம் எனவும் அவா் தெரிவித்தாா்.

 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT