திருவள்ளூர்

ரூ.6 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் உள்ள திருவள்ளூா் ரயில்வே சுரங்கப்பாதை

DIN

திருவள்ளூா் ரயில் நிலையத்தில் ரூ.6 கோடியில் அமைத்து மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

சென்னை-அரக்கோணம் மாா்க்கத்தில் திருவள்ளூா் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் ஏராளமானோா் ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனா்.

இங்கு, ஆறு நடைமேடைகள் உள்ளதால் பயணிகள் கடந்து செல்வதற்கு உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வயது முதிா்ந்தோா், நோயாளிகள், பெண்கள் உள்ளிட்டோா் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது ரயில் மோதி உயிரிழக்கின்றனா்.

இதனால், ரூ.6 கோடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், வடகிழக்குப் பருவமழையின்போது கசிவு ஏற்பட்டு தண்ணீா் தேங்கியதால் மூடப்பட்டது.

ஆனால், பல மாதங்ளாகியும் சுரங்கப்பாதை திறக்கப்படாததால் கழிப்பிடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. எனவே, பயணிகளின் நலன் கருதி சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து திருவள்ளூா் ரயில் பயணிகள் சங்க நிா்வாகி பாஸ்கா் கூறுகையில், திருவள்ளூா் ரயில் நிலையத்தை ஆயிரக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றனா். இங்கு, தண்டவாளத்தைக் கடந்து, பலா் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனா். இதைத் தடுக்க சுரங்கப்பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றாா்.

ரயில் நிலைய அதிகாரி ஒருவா் கூறுகையில், சுரங்கப்பாதையில் நீா் கசிவு ஏற்பட்டதால் அதை சரி செய்யும் பணிகள், வயரிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவு பெற்றதும் சுரங்கப்பாதை அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT