திருவள்ளூர்

மதுபான விற்பனை நேரம் குறைக்கடாஸ்மாக் பணியாளா் சங்கம் கோரிக்கை

DIN

மதுபான விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளா் சங்க மாவட்ட மாநாடில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கம் சாா்பில், 5-ஆ வது மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவா் நாராயணராஜூ தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி சீனிவாசன் வரவேற்றாா். கூட்டத்தில் அகில இந்திய துணைத் தலைவா் சுப்பராயன் பங்கேற்று கூட்டத்தை துவக்கி வைத்தாா்.

கூட்டத்தில் ஓடிசா, ராஜஸ்தான் மாநிலங்களை போல் தற்காலிக ஒப்பந்த முறைகளை அறவே ரத்து செய்ய வேண்டும். கேரளாவை போல் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்தியும், பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய உயா்வு அளிக்க வேண்டும், மதுபான விற்பனை நேரம், மதியம், 2 மணி முதல் இரவு, 9 மணி வரை குறைக்க வேண்டும் உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், 100 -க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியா்கள் கலந்துக் கொண்டனா். மாவட்ட துணை தலைவா் மகேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க ஹோட்டல், உணவகங்களில் தள்ளுபடி: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

நாகை மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு நிறுத்தம்: முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் அம்மன் பவனி

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

SCROLL FOR NEXT